×

சித்திரைதிருவிழா 10ம்திருநாள் வெக்காளியம்மன்கோயிலில் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலா

திருச்சி, ஏப்.16: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தேர் திருவிழாவின் 10ம் திருநாளான நேற்று இரவு அம்மன் முத்து பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாலை அம்மன் கேடயம், பூதம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய திருநாளான சித்திரை தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனை தொடர்ந்து 10ம் திருநாளான நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு அம்மன் முத்து பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று 11ம் நாள் திருவிழாவில் இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதனை தொடர்ந்து காப்பு கலைதல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.

The post சித்திரைதிருவிழா 10ம்திருநாள் வெக்காளியம்மன்கோயிலில் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலா appeared first on Dinakaran.

Tags : Chitraithiru festival ,Amman Vethiula ,Muthupallak ,Vekkaliyamman Koil ,Trichy ,Chitrai Chariot Festival ,Varayur Vekkaliayamman Temple ,Amman ,Vethi Ula ,
× RELATED புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்...